இரகிசய இராணுவ குழு இயங்கிருந்தால் அதன் பொறுப்பினை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஏற்றுக்கொள்ள வேண்டுமேன முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கபில ஹெந்தாவிதாரண தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளர்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக கபில ஹெந்தாவிதாரணவிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை கபில தலைமையிலான இராணுவக் குழுவொன்று மேற்கொண்டதாக அண்மையில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.
எனினும் இந்தக் குற்ற
ச்சாட்டை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள கபில ஹெந்தாவிதாரண அவ்வாறு ஓர் குழு இயங்கியிருந்தால் அதற்கான பொறுப்பிலிருந்து சரத் பொன்சேகா விடுபட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.