157
விமான நிலையத்திலிருந்து 14 மில்லியன் பெறுமதியான போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. மாலைதீவிலிருந்து இலங்கை நோக்கி வந்த விமானமொன்றிலிருந்து சுமார் 1.3 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தின் சுங்கப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
ப்ளை டுபாய் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் இன்று அதிகாலை 1.05 அளவில் இலங்கை வந்தடைந்திருந்தது. இந்தப் போதைப் பொருளை கடத்திய நபர் யார் என்பது குறித்து கண்டறியும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Spread the love