175
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லால் பண்டார இந்த அனுமதியை வழங்கியுள்ளார். வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு சட்டத்தரணி ஊடாக மஹிந்தானந்த அலுத்கமகே நீதிமன்றில் கோரியிருந்தார்.
எவ்வாறெனினும் மற்றுமொரு வழக்குத் தொடர்பில் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு நீதிமன்றம் அழைப்பிணை உத்தரவு பிறப்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
எனவே அந்த வழக்கிலும் முன்னலையாக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Spread the love