தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில்1196 இடங்களில் நுளம்பு வளரும் சூழல் அடையாளம் காணப்பட்டன. கிளிநொச்சியில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நான் நடவடிக்கையின் போது 4318 இடங்கள் பரிசோதிக்கப்பட்டதில் 1196 இடங்களில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டதுடன் 45 இடங்களில் டெங்கு நுளம்பின் குடம்பிகளும் காணப்பட்டன
அத்தோடு 1196 இடங்களில் 1057 இடங்கள் இன்றைய தினமே சுத்திகரிக்கப்பட்டதுடன் 122 இடங்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல்கொடுக்கப்பட்டுள்ளது. என கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்
தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளான 30.03.2017 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது மொத்தமாக மாவட்டத்தில் உள்ள வீடுகள் கல்விநிறுவனங்கள் அரசநிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் கட்டுமாணப்பகுதிகள் மதவழிபாட்டு இடங்கள் மற்றும்பொது இடங்கள் ஆகிய 4318 இடங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 1196 இடங்களில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டதுடன் 45 இடங்களில் டெங்கு நுளம்பின் குடம்பிகள்காணப்பட்டன. மேற்படி 1196 இடங்களில் 1057 இடங்கள் இன்றைய தினமே சுத்திகரிக்கப்பட்டதுடன் 122 இடங்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல்கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினமும் பொதுமக்களும் கிராமமட்ட பொது அமைப்புக்களும் தன்னார்வத்துடன் ஈடுபட்ட இந்த வருமுன் காக்கும் பணியில் நான்கு பிரதேசசெயலகங்களது பணியாளர்கள் சுகாதாரத்திணைக்களத்தினர் காவல்துறையினர் மற்றும் கிராமசேவை அலுவர்கள் ஆகியோர் அர்ப்பணிப்புடன் கூடியபங்களிப்பினை வழங்கினர்.
மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம்அருமைநாயகம் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் மேலதிக அரச அதிபர் சத்தியசீலன் அவர்களது ஒருங்கிணைப்பில் கரைச்சிப் பிரதேசசெயலர் நாகேஸ்வரன் கண்டாவளை பிரதேச செயலர் முகுந்தன் பளை பிரதேசெயலர் ஜெயராணி அவர்கள் மற்றும் பூனகரி பிரதேச செயலர் கிருஷ்ணேந்திரன் ஆகியோர் தமது முழுமையான பங்களிப்பினைப் பொதுமக்களுக்கு வழங்கிவருகின்றமை பாராட்டுக்குரியவிடயமாகும்