எந்த மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்த போதிலும் கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகளை அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ நசீர் அஹமடதெரிவித்துள்ளார்,
கிழக்கில் ஏற்கனவே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் எம் இளைய சமூகத்தினரின் எதிர்காலம் கண்முன்னே சீரழிக்கப்படும் போது அதை கைகட்டி வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதற்கு தாம் ஒரு போதும் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தை போதையற்ற மாகாணமாக்குவதை இலக்காக் கொண்டு இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாகவும் இந்நிலையிலேயே ஸ கல்குடாவில் எரிசாராய உற்பத்தி நிலையமொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் எனவும் ஒரு போதும் இதற்கு இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் உயர் மட்டத்தினூடாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் எனவும் எனினும் எந்த நிலை தோன்றினாலும் இந்த மதுபான உற்பத்தி சாலை கிழக்கில் நிர்மாணிக்கப்படாது என அவர் உறுதியளித்துள்ளார்