கொலம்பியாவின் தென்மேற்குபகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 254 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மணித்தியாலங்களாக தொடர்ந்து பெய்த கனமழையால், மொகோவா ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு புடுமயோ மாகாணத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தமையினால் பலரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுப்புறப் பகுதிகள் அனைத்தும் நிலச்சரிவில் புதைந்திருப்பதாகவும் மோசமான வானிலை மற்றும் கட்டமைப்பு வசதிகளால், மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மீட்புபணியினாரால் மீட்கப்பட்ட 400க்கும் மேற்பட்டவாகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆற்றின் கரைகள் உடையும் அபாய நிலை தொடர்பில் முன்னரே மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதனால் பலர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டதாகவும் இல்லாவிட்டால் மேலும் உயிரிழப்புகள் அதிகமாயிருக்கும் எனவும் உள்ளுர் தகவல்கள் தெரி விக்கின்றன.