நேர்மையும் செயற்திறனும்வாய்ந்த தூய்மையான அரசியல் இயக்கமே இன்று இந்த நாட்டின் இளைஞர் தலைமுறை உள்ளிட்ட அனைத்து மக்களினதும் அரசியல் தாகமாக உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஊழல், மோசடிகளை மேற்கொண்டு அரச வளங்களையும் பொதுமக்களின் சொத்துக்களையும் முறையற்றவகையில் பயன்படுத்தி தமது சட்டைப் பைகளை நிரப்பிக்கொள்ள எந்தவொரு அரசியல்வாதியும் எத்தனிப்பார்களாயின் அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாயினும்சரி அவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தான் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இன்று; கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
‘தீர்வுக்குப் பலம்’ என்ற கருப்பொருளின் கீழ் நாடெங்கிலும் இருந்து சுமார் 12 ஆயிரம் இளைஞர், யுவதிகள் பங்குபற்றிய இந்த மாநாடு 13 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.