தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருவரை எரித்துப் படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இராணுவத்தின் லெப்டினன்ட் கேர்ணல் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1997ஆம் ஆண்டு குறித்த 2 விடுதலைப்புலிகள் உறுப்பினர்க்ள இருவரும் கொலை செய்யப்பட்டிருந்தனர்;. குறித்த சம்பவம்; தொடர்பில் இராணுவத்தைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில், லெப்டினன்ட் கேர்ணல் குமார வீரசிங்ஹ உள்ளிட்ட அறுவருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்த யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஏனைய 10 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களான எஸ்.சௌந்தரராஜன் மற்றும் மனுனாபிள்ளை ஜயசீலன் ஆகிய இருவரும் சிறுப்பிட்டிப் பிரதேசத்தில் வைத்து எரித்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். குறித்த வழக்கு, கடந்த 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட ஐவருக்கு எதிராக, மனிதப் படுகொலை குற்றச்சாட்டின் கீழ், அதிகுற்றச்சாட்டுப் பத்திரத்தைத் தாக்கல் செய்து அவ்வழக்கை, மிகவிரைவாக விசாரணைக்கு உட்படுத்துமாறும் சட்டமா அதிபர் பரிந்துரை செய்திருந்தார்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் ஐவரும், இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனால், சட்டமா அதிபரின் அனுமதியின்றி பிணை வழங்கமுடியாது எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கை, எதிர்வரும் 05ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்