ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் பொருளாதார மதிப்பீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டின் கடன் சுமையை தீர்ப்பதற்காக ஓர் வழிமுறையாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த தீர்மானங்கள் அமைந்துவிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் செய்துள்ள பதிவு ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கமும் ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், கொழும்பு தெற்கு துறைமுகப் பகுதி, துறைமுக நகர் மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகியனவற்றை வெளிநாட்டு முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசாங்கமும் அதே வழியை பின்பற்றக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கையை தயாரிக்கும் குழுவிலிருந்து அண்மையில் சம்பிக்க ரணவக்க விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.