மெக்ஸிக்கோவில் ஊடகவியலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதனைக் கண்டித்து பத்திரிகை அச்சிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவின் பிராந்திய பத்திரிகையொன்றே இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளது. ஊடகவியலாளர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், கொலைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
எனினும் இவ்வாறான குற்றவாளிகளுக்கு எவ்வித தண்டனையும் விதிக்கப்படுவதில்லை என Norte de Ciudad Juarez என்ற பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது. பத்திரிகையை அச்சிடுவது நிறுத்தப்பட்டாலும் இணையத்தில் தொடர்ந்தும் செய்திகள் வெளியிடப்படும் என பத்திரிகை நிர்வாகம் அறிவித்துள்ளது. பத்திரிகையின் செய்தியாளரான Miroslava என்ற ஊடகவியலாளர் கடந்த மாதம் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.