தேசத் துரோக வழக்கில் வைகோவை 15 நாள் காவலில் வைக்குமாறு சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு கூட்டம் ஒன்றில் பேசிய பேசிய வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்துகளை பேசியமையை தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கானது பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று வைகோ சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் சரணடைந்தார்.
சுரணடைந் வைகோவை பிணையில் செல்ல நீதிமன்றம் வாய்ப்பளித்த போதும் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டதனையடுத்து 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.