163
எதிர்வரும் மே 14ம் திகதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என மாநில தேர்தல் ஆணையகத்துக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்தநிலையில் மனுவுக்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், பிரச்சினைகளை தீர்க்கவே நீதிமன்றம் உள்ளது எனவும் அரசை நடத்த அல்ல எனவும் தெரிவித்ததுடன் மே 14ம் திகதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
Spread the love