160
ஊர்காவற்துறை கர்ப்பிணி படுகொலை வழக்கின் சந்தேகநபர்களான சகோதர்கள் இருவரின் விளக்கமறியல் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையை அடுத்து வழக்கினை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அதுவரையில் சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்கஉத்தரவு இட்டார்.
வழக்கின் பின்னணி
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் பெண் படுகொலை செய்யபட்டார்.
குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் சகோதர்களான இரு நபர்கள் அன்றைய தினம் மாலை மண்டைதீவு சந்தியில் உள்ள ஊர்காவற்துறை காவல்துறையின் காவலரணில் கடமையில் இருந்த காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
Spread the love