166
அவுஸ்திரேலிய சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் Concetta Fierravanti-Wells இலங்கைக்கு வரவுள்ளார். எதிர்வரும் 4ம் திகதி முதல் 7ம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் முதல் தடவையாக இலங்கைக்கு வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையில் சுமார் எழுபது ஆண்டுகள் நிலவி வரும் ராஜதந்திர உறவுகளை குறிக்கும் வகையில் இந்த பயணம் அமைய உள்ளது. பெண்களை வலுவூட்டல், வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
Spread the love