149
எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் பீறி (Paul Godfrey ) வடமாகாண முதலமைச்சரை இன்று திங்கட்கிழமை யாழில் உள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்துகலந்துரையாடினார்.
அக் கலந்துரையாடல் தொடர்பில் முதலமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது , வடமாகாண சபையும், ஐரோப்பிய ஒன்றியமும், புரிந்துணர்வுடன் எவ்வாறு செயற்பட முடியும் என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி ஆராய்ந்துள்ளார்.அதன் போது வடமாகாண மக்களுடன் எவ்வாறு வேலை செய்யலாம் என கேள்வி எழுப்பியதுடன், மக்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
கடந்த காலங்களில் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை எம்முடன் கலந்தாலோசிக்காது நடைமுறைப்படுத்துவது பிழை என அதன் போது சுட்டிக்காட்டியிருந்தேன். என முதலமைச்சர் தெரிவித்தார்.
இது குறித்து தெரிவித்த கோட் பீறி மக்களின் தேவைகள் குறித்து பேசப்பட்டதாகவும் வட மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடு குறித்து அறிந்து கொள்வது முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love