166
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின் மையப்பகுதியில் உள்ள 2 மெட்ரோ புகையிரத நிலையங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 10 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் 20 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து அங்கு அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் புகையிரதநிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குண்டுவெடிப்புக்கான காரணங்கள் எவையும் வெளியாகவில்லை.
Spread the love