யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு இணங்க முடியாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையிலான யுத்தம் தொடர்பில் சில சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல் குறித்து விசாரணை நடத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
30 ஆண்டுகளாக நாட்டில் நீடித்த யுத்தத்திற்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என சுட்டிக்காட்டியுள்ள அவர் அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசாங்கம் நல்லிணக்க முனைப்புக்களை ஆரம்பித்துள்ளதாகவும் இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் தமிழ் இமுஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்களுக்கும் இருக்கின்ற வகையிலான தீர்வொன்றையும் உருவாக்க இருப்பதாக தெரிவித்த அவர் அத்துடன் மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்த வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.
1 comment
தமிழனின் மண்ணிலிருந்தே யுத்த குற்ற விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறக்கூடிய தகுதி சிங்கள கொலைகார கூட்டத்திற்க்கு எப்படி வந்தது ? எல்லாம் காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியர்களின் கைங்கரியத்தால் வந்தது , 1995 ம் ஆண்டு குடா நாட்டையே சுடுகாடாக்கிய செம்மணி புதை குழி கொலைகாரி தெல்லிப்பளையில் வைத்து கொலைகார கூட்டத்தை வீர புருக்ஷர்களாக்கியும், தமிழ் வீர மறவர்களை பயங்கரவாதிகள் என்று பேசக்கூடிய தகுதி எப்படி வந்தது ? கொலை கொள்ளை கற்பழிப்பு ஊதியத்திற்க்கா வந்த காடையர்களை வீரர்கள் என்றால் எந்த ஊதியத்தையும் எதிர்பார்க்காமல் தன் மண்ணிற்க்கா தியாகம் செய்த தமிழ் மறவர்களை எப்படி அழைப்பதென்று காக்கை வன்னியர்களே கொலைகார கூட்டத்திடம் விசாரித்து பாருங்கள் , இனப்படு கொலைகார கூட்டம் தமிழனை இழிவாக பேசியபின்பும் அந்த கூட்டத்தின் செருப்புக்களை சுமக்கும் இழி கோல பிறவிகளே சிந்தித்து பாருங்கள் இப்படியும் மானத்தை விற்று வாழ வேண்டுமா என்று. ராஜன்.