கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோரின் வாகனங்களை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர். மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு, சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் எதிர்வரும் 9ம் திகதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மது வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது
இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் செய்ய செல்வதற்காக சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தனித்தனி வாகனங்களில் சென்று கொண்டு இருந்தவேளை மூவரின் கார்களும் நிறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் வாகனங்களில பணம் எதுவும் இல்லை என்பதனை உறுதிப்படுத்தியபின்னர் கார்களை செல்ல அனுமதித்தனர்.