நீதிச் சேவை ஒன்றியத்தின் தீர்மானங்கள் நீதிமன்றை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நீதிச் சேவை ஆணைக்குழுவினால் மட்டுமே உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நீக்க முடியும் எனவும் அரசியல் சாசனத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஒழுக்காற்று அடிப்படையில் மட்டுமே இவ்வாறான பரிந்துரைகளை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிச் சேவை ஒன்றியம் என்பது ஓர் தொழிற்சங்கம் எனவும் அந்த தொழிற்சங்கம் நீதிபதி ஒருவரை பணி நீக்குமாறு அழுத்தம் கொடுப்பதும் தீர்மானம் நிறைவேற்றுவதும் துரதிஸ்டவசமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கமோ அல்லது நீதிச் சேவை ஒன்றியமோ உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிப்பது குறித்து தீர்மானம் எடுக்க முடியாது எனவும் தெரிஅவர் வித்துள்ளார். ஆர்.கண்ணன் என்ற சட்டத்தரணி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டமை குறித்து சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.