183
சூரியன், இன்றுமுதல் இலங்கைக்கு மேல் உச்சம் கொடுக்க உள்ளதாகவும் இதனால் நாடெங்கிலும் கடும் வெப்பமான காலநிலை நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் 15ம் திகதி வரையில் இந்த நிலைமை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொருநாளும் இலங்கைக்கு மிக அருகில் சூரியன் தோன்றும் இடங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று ஹம்பாந்தொட்டை, கட்டம்பே, நாகியாதெனிய மற்றும் மலிதுவ ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் பெற்றிருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Spread the love