166
வட மாகாணத்தில் முப்படையினர் வசமுள்ள நிலப்பரப்பு குறித்த விவரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் மூன்றுமாத கால அவகாசத்தை கோரியுள்ளது. பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
2009 மே 19 முதல் 2015 ஜனவரி 08 மற்றும் 2016 செப்டெம்பர் 30 ஆகிய திகதிகள் அளவில் வட மாகாணத்தில் காணப்பட்ட தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களின் எண்ணிக்கை, இவற்றின் நிலப் பரப்பளவு தனித்தனியே தருமாறு அவர் கோரியிருந்த நிலையில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு காலஅவகாசம் கோரியுள்ளார்.
Spread the love