180
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் புதிய வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள சந்தேக நபர்களில் முதலாவது சந்தேக நபர் , “தம்மை பழிவாங்கும் நோக்குடன் பொய் குற்றசாட்டு சுமத்தி கைது செய்து உள்ளதாகவும் , தாம் வெளியில் வந்த பின்னர் அவரை கண்டால் வெட்டுவோம். ” என கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து கொலை மிரட்டல் விடுத்திருந்தார் எனவும் ஊர்காவற்துறை காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறை உத்தியோகஸ்தரான கோபி என்பவர் தொிவித்துள்ளாா்.
குறித்த சம்பவம் தொடர்பில், பிறிதாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டு வந்தன.குறித்த குற்றசாட்டை 28.11.2016 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்கள் ஏற்றுக்கொண்டனர்.
அந்நிலையில் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் ஊர்காவற்துறை காவல்துறையினர் முதலாவது சந்தேக நபருக்கு எதிராக கொலை மிரட்டல் குற்றசாட்டை பதிவு செய்து ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
Spread the love