156
இலங்கைக்கு எதிராக பயண எச்சரிக்கை விடுக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. H1N1 காய்ச்சல் பரவல் காரணமாக கட்டார் அரசாங்கம் இலங்கைக்கு தமது நாட்டுப் பிரஜைகள் பயணம் செய்வது தொடர்பில் பயண எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் இந்த பயண எச்சரிக்கையானது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நோய்த் தொற்றுத் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையானது அசாதாரண நிலைமை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love