196
இன்று முதல் நடைபெறவிருந்த முதலாம் வருட புதிய பாடத்திட்ட பொது கலைமாணி வெளிவாரிப் பட்டபடிப்புக்கான பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக தொடர், தொலைக் கல்வி நிலையம் அறிவித்துள்ளது. எனினும் அது மீண்டும் நடத்தப்படும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அண்மையில் அறிவித்திருந்தது இனந்தெரியாத வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் சகல பீடங்ககளையும் தற்காலிகமாக மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Spread the love