ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இடம்பெற்ற வன்முறை தொடர்பாக பொதுமக்கள் தகவலை தெரிவிக்க இம்மாதக்கடைசி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக விசாரணை ஆணையர் எஸ்.ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழந்hட்டின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜனவரி மாதம் போராட்டங்கள் நடைபெற்று இறுதியில் வன்முறைகளும்இடம்பெற்றன. இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இந்த வன்முறை குறித்து தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள், நேரடி தொடர்பு உடையவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தெரிந்த தகவலை சத்தியப்பிரமாண உறுதிமொழி பத்திர வடிவில் தயாரித்து கடந்தமாதம் 31ம் திகதிக்குள் அனுப்புமாறு வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இதுவரை கிடைத்த உறுதிப்பத்திரங்கள் முழு விசாரணை நடத்த போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து இ கால அவகாசம் வேண்டும் என கோரிக்கைகள் வந்ததாகவும்இதை ஏற்று இம்மாதம் கடைசி வரை உறுதிமொழி பத்திரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்கப்படுகிறது எனவும் ஆணையர் எஸ்.ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்
மேலும் மேமாதம் 2-வது வாரத்தில் விசாரணையை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.