சொத்து விபரங்களை உரிய முறையில் வெளிப்படுத்தாமைக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய காலத்தில் மூன்று ஆண்டுகள் சொத்து விபரங்களை வெளியிடவில்லை என குற்றம் சுமத்தப்பட்டு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தாம் உரிய முறையில் தகவல்களை வழங்கவில்லை என துமிந்த சில்வா குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். இதனையடுத்து குற்றத்தை ஒப்புக் கொண்ட அவருக்கு 3000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது