தமிழக விவசாயிகளின் போராட்டம் 24ஆவது நாளாகவும் டெல்லியில் நடைபெறுகின்றது. விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறைகளில் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் – கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுப்பது சிறப்பம்சமாகும்.
இந்த நிலையில் தமிழக விவசாயிகள் டெல்லி முதல்வர் அரவிந்த் கஜிரிவாலை இன்று சந்தித்து தமது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றுவதற்கு டெல்லி முதல்வரை வலியுறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தலைமையில் 50 பேரும் இன்று மூன்றாவது நாளாக ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். மேலும் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு இன்று டெல்லி முதல்வரை சந்திதததாகவும் அவர் தானே ஜந்தர் மந்தருக்கு நேரில் வர விரும்பியதாகக் கூறி போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளதாகவும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
அத்துடன் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை தமிழகம் திரும்பப் போவதில்லை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு கூறினார்.