165
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் நான் இணைந்திருந்தது பிழை. அதனால் மக்கள் என்னை வெறுத்தனர் என நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் எதிரி யாழ்.மேல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி சந்தைக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணை வியாழக்கிழமை யாழ்.மே ல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிரி , சாட்சி கூண்டில் நின்று வாக்கு மூலம் அளித்தார். அதன் போது எதிரி போலீசார் என்னை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த வேளை மக்கள் வெளியில் போராட்டம் நடத்தினார்கள். என்னை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரினார்கள் என நீதிமன்றில் வாக்கு மூலம் அளித்திருந்தார்.
அதன் போது நீதிபதி “ஏன் மக்கள் உமக்கு எதிராக போராட்டம் நடாத்தினார்கள் ” என எதிரியிடம் வினாவினார். அதற்கு எதிரி நான் இருந்த இடம் பிழை. நான் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இணைந்திருந்தேன். அக்கால பகுதியில் அதிகாரங்களில் சிலவற்றை செய்தேன். அதனால் , நெடுந்தீவு மக்கள் என் மீது வெறுப்பாக இருந்தார்கள். அதனாலையே எனக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என தெரிவித்தார்
Spread the love