165
நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் எதிரி ஊடகவியலாளர்கள் மீது உணவு பொதியினை வீசி தாக்குதல் நடாத்தி, கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி சந்தைக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டு, குறித் த வழக்கு நாளைய தினம் தீர்ப்புக்காக நீதிபதி ஒத்திவைத்தார். அதனை தொடர்ந்து எதிரியை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் அழைத்து வந்து சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றுகையில் அதனை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்தனர்.
அதன் போது எதிரி தனது கையில் இருந்த உணவு பொதியினால் ஊடகவியலாளர்கள் மீது வீசி தாக்குதல் நடாத்தியதுடன் , “இந்த வழக்கு உடைச்சு வெளியே வந்தால் உங்களை வெட்டுவேன்” என அச்சுறுத்தினார். அதன் போது சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் எதிரியை சிறைச்சாலை வாகனத்தினுள் ஏற்றினார்கள். ஏற்றிய பின்னரும் வாகனத்தில் இருந்தவாறு சுடுவேன் என கைகளினால் செய்கை மூலம் அச்சுறுத்தினார்.
Spread the love