187
இந்தியன் பிரிமியா லீக் போட்டித் தொடரில் விக்கட் காப்பாளராக செயற்படப் போவதில்லை என தென் ஆபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டி.பி. டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். டிவில்லியர்ஸ் பலம்பொருந்திய றோயல் சலன்சர்ஜஸ் பங்களுரு அணியை பிரதிநித்துவம் செய்கின்றார். உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ள டிவில்லியர்ஸ் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை.
உடற் தகுதியின் பின்னரே தாம் அடுத்த போட்டியில் பங்கேற்பது குறித்து தீர்மானிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் எவ்வாறெனினும், இந்த பருவ காலத்தில் தாம் விக்கட் கப்பாளராக செயற்படப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love