172
அத்தியாவசிய பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் நிலவவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீனும், நிதி அமைச்சரும் இணைந்து பண்டிகைக் கால பொருள் விற்பனை குறித்து கண்காணிப்பு நடத்தியுள்ளனர். அத்துடன் பொதிராஜா மாவத்தையில் அமைந்துள்ள அரிசி மொத்த விற்பனை நிலையங்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
Spread the love