172
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஆயுள் காலம் முடிவடையும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனரத்தின குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் சில மாதங்களில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஆயுள் முடிந்துவிடும் என்று தெரிவித்த அமைச்சர் கடந்த ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்ற பல்வேறு ஊழல் மோசடி தொடர்பில் தகவல்களை வெளியிடவுள்ளதாகவும் கூறினார்.
அந்த தகவல்கள் வெளிவந்ததும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஆயுள் முடிந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். கெபிட்டிக் கொள்ளாவவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
Spread the love