178
சிரிய இராசாயன தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஈரானிய ஜனாதிபதி ஹசன் ருஹானி கோரியுள்ளார். சிரியாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரசாயன தாக்குதல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த தாக்குதல்களை சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட்டின் தரப்பினர் மேற்கொண்டதாக அமெரிக்கத் தரப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் அதற்கு எதிராக அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தியமை என்பன பிராந்திய வலயத்தில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love