எகிப்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இன்றையதினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததுடன் 50பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எகிப்து தலைநகர் கெய்ரோவின் அருகில் உள்ள டான்ரா நகரில் அமைந்துள்ள இந்த தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தவேளையில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
மீட்புக்குழுவினரால் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியாலைகளுக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எகிப்தில் அண்மைக்காலமாக சிறுபான்மையாக உள்ள கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடமும் டிசம்பர் மாதமளவில் கெய்ரோவில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை நேரம் குண்டு வெடித்ததில் 25 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.