அநாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததனையைத் தொடர்ந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரிவிற்கும், புலனாய்வுப் பிரிவிற்கும் நேற்றைய தினம் தொலைபேசியூடாக விடுக்கப்பட்ட அநாமதேய மிரட்டலையடுத்தே விமான நிலையப்பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேற்படி தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாக பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்கின்றவர்கள் மற்றும் வெளியேறுகின்றவர்கள் சர்வதேச பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களா என கண்காணித்து வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.