162
மாகாணசபைத் தேர்தல்கள் விருப்பு வாக்கு முறையில் நடத்தப்பட உள்ளதாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். வடமத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் விருப்பு வாக்கு முறையில் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த மூன்று மாகாணசபைகளினதும் பதவிக் காலம் இந்த ஆண்டில் நிறைவடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love