ஊக்க மருந்து பயன்பாடு குற்றச் செயலாக கருதப்பட வேண்டுமென மரதன் உலக சாதனையாளர் பாவுலா றட்சிலிபி ( Paula Radcliffe )தெரிவித்துள்ளார். ஊக்க மருந்து பயன்படுத்தும் விளையாட்டு வீர வீராங்கனைகளை குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கக்கூடிய ஒர் சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரேஸில் ஒலிம்பிக் போட்டி மற்றும் லண்டன் மரதன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கென்ய வீராங்கனை ஜெமிமா சும்கோங் (Jemima Sumgong ) ஊக்க மருந்து பயன்படுத்தியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோசடியான முறையில் போட்டிகளில் வெற்றியீட்டுவதனால் ஏனையோருக்கு ஏற்படும் இழப்புக்கள் வார்த்தைகளினால் சொல்ல முடியாதவை என பிரித்தானிய வீராங்கனை பாவுலா தெரிவித்துள்ளார். குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.