இந்தியாவில் மனநலம் பாதித்தவர்களின் நலன்களை பாதுகாக்க புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ள இந்த சட்டம் மனநலம் பாதித்தவர்களை சங்கிலியால் பிணைத்து கட்டிப்போடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சி செய்தால், அவர்களை தண்டிக்கக் கூடாது எனவும் மனநலம் பாதிக்கப்பட்டவர் களைப் பராமரிப்பது, அவர் களுக்கு சிகிச்சை அளிப்பது, அவர் களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுப்பது ஆகியவை மத்திய, மாநில அரசுகளின் கடமை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு மருத்துவ காப்புறுதி பெற்றுக்கொள்ளவும் இச்சட்டம் வழி வகுக்கினதென தெரிவிக்கப்பட்டுள்ளது