316
சீன அரசாங்கம் வெளிநாட்டு உளவாளிகள் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு பணப் பரிசில்களை வழங்கத் தீர்மானித்துள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நிலை கொண்டு உளவுத் தகவல்களை திரட்டி வரும் வெளிநாட்டுப் பிரஜைகள் பற்றிய தகவல்களை வழங்கும் சீனப் பிரஜைகளுக்கே இவ்வாறு பெருந்தொகை பணப் பரிசு வழங்கப்பட உள்ளது.
பெய்ஜிங் வாழ் மக்கள் தகவல்களை வழங்குவதன் மூலம் 500,000 யுவான் வரையில் சன்மானம் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு உளவாளிகளுக்கு எதிராக நாட்டின் அனைத்து மக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
Spread the love