கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தின் பின்னர் அனைத்து தேர்தல்களும் ஒத்தி வைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தின் பின்னர், அரசாங்கம் பீதியடையும் என குறிப்பிட்டுள்ள அவர் மக்கள் அலையினால் ஒட்டுமொத்த காலி முகத் திடல் மைதானமும் மே தினமன்று மூடப்பட்டிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மாகாணசபைத் தேர்தல்களும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களும் நடத்தப்பட வேண்டியிருப்பதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் அரசாங்கத்திற்கு பாடங்களை கற்றுக்கொடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் காரணங்களைக் கூறாமல் முடிந்தளவு விரைவில் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.