குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவர் கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
கனேடிய குடிவரவு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர் சபை அவரைக் கடத்துவதற்கான உத்தரவினை பிறப்பித்திருந்தநிலையில் நேற்று நள்ளிரவு அவர் இலங்கையை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் நாடு கடத்தப்படவுள்ளார்
Apr 11, 2017 @ 03:27
2012ம் ஆண்டில் அனுஜா பாஸ்கரன் என்ற பெண்ணின் சடலம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மொன்டரல் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்த பெண் குறித்த நபரின் மனைவி எனவும், பெண்ணை குறித்த நபர் கொலை செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளார். கனேடிய குடிவரவு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர் சபை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், குறித்த நபர் உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார் எனவும் இந்த மேன்முறையீடு விசாரணைக்கு உட்படுத்த நான்கு ஆண்டுகள் வரையில் காலம் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரையில் தொடர்ந்தும் குறித்த நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
2012ம் ஆண்டில் அனுஜா பாஸ்கரன் என்ற பெண்ணின் சடலம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மொன்டரல் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்த பெண் குறித்த நபரின் மனைவி எனவும், பெண்ணை குறித்த நபர் கொலை செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.