163
ஜப்பான் நாட்டுக்கு உத்தியோக பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு பிரதமர் சின்சோ அபேவை இன்று சந்திக்க உள்ளார். இதன்போது முக்கிய பேச்சுவார்த்தையில் பிரதமர் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏழு நாள் உத்தியோக பயணமாக பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நேற்றையதினம் ஜப்பான் சென்றிருந்தனர். ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயின் அழைப்பில் அங்கு சென்றுள்ள இலங்கைப் பிரதமர்; அந்நாட்டில் இடம்பெற உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றவுமை குறிப்பிடத்தக்கது.
Spread the love