167
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்புப் பணிகளை இலங்கைக் கடற்படையினர் மேற்கொள்வர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ள பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்து சமுத்திர வலயத்தின் பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை பொறுப்புணர்ச்சியுடன் செயற்படும் என குறிப்பிட்டுள்ள அவர் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பானின் உதவி அவசியப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையைப் போன்று நவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை ஒன்றை கண்டியில் அமைப்பதற்கு ஜப்பானின் உதவி அவசியப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love