167
எதிர்வரும் மே மாதத்தில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைக் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரிச் சலுகை வழங்குவது குறித்து ஆராயும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்தப் பிரதிநிதிகள் எதிர்வரும் 19ம் திகதி பெல்ஜியம் பிரசல்ஸில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய விசேட கூட்டத்தில் இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். பொருளாதார ஸ்திரத்தன்மை, மனித உரிமைகள், தொழிலார் உரிமைகள் போன்றன குறித்து ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் இலங்கைக்கு வந்துள்ள பிரதிநிதிகள் ஆராய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love