கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட கலாசார விழாவில் வெளியிடப்பட்ட கரை எழில் 2016 நூலில் கிளிநொச்சியும் மலையக தமிழர்களும் எனும் தலைப்பில் வெளியான கட்டுரை தொடர்பில் சமூகத்தில் கிளம்பிய எதிர்ப்புக் காரணமாக கரைச்சி கலாசார பேரவை இன்று வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கலாசார பேரவையின் தலைவரும், பிரதேச செயலாளருமான கோ. நாகேஸ்வரன் ஒப்பம் இட்டு வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கரை எழில் 2016 இல் கிளிநொச்சியும் மலையக தமிழர்களும் எனும் தலைப்பில் வெளியான கட்டுரை அச் சமூகம் கவலையுறும் விதத்தில் இடம்பெற்றுவிட்டது. இதனையிட்டு கலாசார பேரவை வருத்தமடைகிறது இதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது அத்துடன் எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் இடம்பெறாத வண்ணம் கவனத்தில் கொள்கிறது கலாசார விழாவின் போது வழங்கப்பட்ட 15 பிரதிகளும் திரும்ப பெறப்பட்டு ஒட்டுமொத்த பிரதிகளிலும் சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கம் செய்யப்பட்டு வெளியீடு செய்யப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது