அமெரிக்காவின் முதல் பெண்மணியினான மெலனியா டிரம்ப் குறித்து கட்டுரை எழுதிய ஐக்கிய ராஜ்ஜியத்தின் டெய்லி மெயில் நாளேடு அவருக்கு சுமார் 150 மில்லியன் டொலர்களை நட்டஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அவரது மொடலிங் வாழ்க்கை குறித்து எழுத்திய கட்டுரை தொடர்பிலேயே இவ்வாறு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கட்டுரையால் அவருக்கு ஏற்பட்ட நட்டங்கள் மற்றும் மன உளைச்சலுக்கான செலவுகளை கொடுக்க டெய்லி மெயில் நாளேடு ஒப்புக் கொண்டுள்ளது.
மெலனியா டிரம்ப் முன்பு பாலியல் தொழிலாளியாக பணியாற்றினார் செய்தி வெளியிட்டிருந்த டெய்லி மெயில் நாளேடு அந்த செய்தியை திரும்பப் பெற்று கொண்டிருந்தது. கடந்த பெப்ரவரி மாதம் மெலனியா குறித்த கட்டுரை தொடர்பில் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.