175
ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இந்த பாகிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் வந்த குறித்த சந்தேக நபர் பாதணிக்குள் இந்த போதைப் பொருளை மறைத்து வைத்துக் கொண்டுவந்துள்ளார். மீட்கப்பட்டுள்ள ஹெரோயின் போதைப் பொருளின் எடை சுமார் 1116 கிராம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Spread the love