யாழ்ப்பாணத்தில் மண் கல் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு அதிகாரியை மேலதிகாரியால் கூட ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறது என்றால் இவருக்கு பின்னால் மேலதிகாரிக்கு மேலே யாரோ இருக்கிறார்கள் என்பது உண்மை. மக்கள் இன்னும் மீளக்குடிமர இருக்கும் பிரதேசத்தின் செயலராக இவர் பணியாற்றுகிறார். ஆரம்ப கால வாகன இலக்கத்துக்கு முன்னால் இருக்கும் எழுத்துப் போல் இவரின் பெயருக்கு முன்னாலும் அந்த எழுத்து இருக்கிறது என்றால் இரண்டுக்கும் என்ன ஒற்றுமை பாருங்N;கா. அதனால்த் தான் என்னவோ 2 லொறி 2 டிப்பர் கார் மோட்டார் சைக்கிள் என்று நிறைய வாகனங்களை வாங்கி தனது தந்தையின் பெயரில் வைத்திருக்கிறார் போலும்.
இலட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கும் தனது அரச வேலை தவிர்ந்த பிறவேலைகளை தான் செய்யாமல் தனக்கு நெருங்கிய நண்பர் மூலம் செய்து வருகிறார். சுண்ணக்கல் எடுத்து விற்பது முதல் மணல் விற்பனை வரை நண்பர் மூலம் செய்து வருகிறார். 5 வருடங்களுக்கு முதல் நிரந்தர வீடில்லாமல் இங்கே இருப்பவர்களுக்கு வீட்டு திட்டத்தை வழங்காமல் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இங்கே வீட்டுத் திட்டத்தை வழங்கிய பெருமை இவரைச் சேரும். அவர்களுக்கு இங்கே வீடு இருக்கும் போது இவரால் எப்படி வீட்டுத் திட்டத்தை வழங்க முடிந்தது. இன்றும் இதற்கு விசாரணை இல்லை.
தீவுப் பகுதியொன்றில் இவர் செயலாளராக இருந்த சமயம் மண் விற்கத் தொடங்கியவர் மக்களுக்கு வழங்க சேவாலங்கா கட்டிய வீட்டுக்கு மண் கல் வழங்கியது முதல் தொடர்கிறது. மண்ணெண்ணைய் விற்றவன் பெரிய ஆளாக வந்தது போல் மண் விற்றவனும் பெரிய ஆளாக வரும் ஊரிது. ஆனால் மண் விற்கத் தொடங்குபவன் ஒரு போதும் சுற்றுச் சூழல் சம்பந்தமாக சிந்தனையில்லாதவன் என்பது வெளிப்படை. இவர் அரச அதிகாரியாக வந்து பல வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் இவரால் ஊருக்கு ஒரு போதும் நன்மை ஏற்படவில்லை.
இடம்பெய்ர்ந்து மீளக்குடியேற முடியாமல் தவிர்த்துக் கொண்டிருக்கும் அந்த மக்கள் பற்றி சிறு துளியளவு கூட சிந்திக்காமல் இருப்பது மட்டுமல்ல அந்த மக்களுக்கு கிடைக்கக் கூடியவை கிடைக்காமல் போவதற்கு இவர் தான் காரணமாக இருக்கிறார். இவ்வாறு செயற்படும் இவருக்கு இடமாற்றம் வந்தும் போகாமல் இருக்கிறார். இவரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யும் அளவுக்கு இவருக்கு பெரிய மட்டத்தில் செல்வாக்கு இருக்கிறது. ஒரு அதிகாரிக்கு பெரிய மட்டத்தில் செல்வாக்கு இருப்பதற்கான தேவையென்ன என்று பார்த்தால் வாயே திறக்க மாட்டியள் அந்தளவுக்கு பெரிய மட்டத்துக்காக இவர் செயற்படுகிறார். அவர்களும் இவரை கவனித்துக் கொள்கிறார்கள். பிறகு எப்படி இவர் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கோர்வைக்குள் நின்று செயற்படுவார்.
கிணறு கட்ட நிதி வந்தும் கிணற்றைக் கட்டாமல் ஆளாளுக்கு பணத்தை எடுத்துவிட கிணற்றைப் பார்ப்பதற்காக சம்பந்தப்பட்டவர்கள் வரப்போகின்றார்கள் என்றதும் இருந்த கிணற்றைக் காணவில்லை என்று வடிவேல் ஒரு படத்தில் பொலிஸில் முறையிடுகிறார். அதேபோல் வீதிகள் சில திருத்தப்படாமலே இவர் பணத்தை எடுத்துள்ளார். அதாவது இந்தப் பகுதி வீதிக்கு சம்பந்தப்பட்ட பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் பணத்தை எடுப்பதற்கு கையெழுத்து வைக்க மறுத்துவிட்டார். இதனால் பயிற்சி தொழிநுட்ப உத்தியோகத்தரை வைத்து கையெழுத்திட்டு பணத்தை எடுத்துள்ளார். ஒரு நாள் வீதி எங்கே என்று சம்பந்தப்பட்டவர்கள் வந்து கேட்கும் போது சேதமடைந்துவிட்டது என்று இவர் சொன்னாலும் வியப்பதற்கில்லை.
பொறுமை இழந்த இந்தப் பிரதேச மக்கள் எல்லோரும் ஒன்று கூடி இவரை இடமாற்றக் கோரி கடிதம் எழுதி கையெழுத்து வைத்து மேலதிகாரியிடம் சென்று வழங்கினர். மேலதிகாரி இவரின் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட வேளை ஒரு போன் கோள் மேலிடத்தில் இருந்து வந்தது இந்த அதிகாரியை மாற்றக் கூடாது. அவ்வளவு தான் தனக்கேன் இந்த வம்பு வேலையென்று மக்கள் வழங்கிய கடிதத்தை ஒரு மூலையில் வைத்துவிட்டார். மக்கள் கடிதம் வழங்கி ஒரு வருடம் கடந்து விட்டன. எந்தவித நடவடிக்கையும் மேலதிகாரி எடுக்கவில்லை.
வடக்கு செயலர்களில் பலர் காணி மண் கல் விற்பனையில் இருந்து பேக்கரி வரை தொழிலில் முன்னேறி வருகின்றனர். ஆனால் தமது வேலையை செய்யாமல் இருப்பதால் தமது பிரதேசம் பின்னடைந்து செல்கிறது என்று கவலையi;டவதற்கு இவர்கள் தயாரில்லை. கேட்டால் அப்பேர்து புலிகளின் நிர்வாகம் இப்போது எங்களின் நிர்வாகம் என்று கடை விடுகிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத இவர்களிடம் நேர்மை இருக்கும் என்று ஒரு போதும் நம்பமுடியாது. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இப்பொழுது இவர்களிடம் அகப்பட்டு நொந்து நூலாகிப் போகிறார்கள். இவர்களில் இந்த அதிகாரியும் விதிவிலக்கல்ல.
‘பாடு நிலாவே…..’ என்று சிறையில் இருந்து மோகன் பாடுவது போல் இவர் எப்ப பாடப் போகிறாரோ என்று இந்தப் பிரதேச மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.