பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பின் நகல் மற்றும் குற்றப்பத்திரிகையின் நகலை வழங்குமாறு பாகிஸ்தானிடம் இந்திய மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே பாகிஸ்தான் வெளியுறவு செயலாளரை சந்தித்தபோது ஜாதவை, தூதரக அதிகாரிகள் சந்தித்து பேச அனுமதி கோரியிருந்ததன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மட்டும் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகள் 13 முறை முயன்றனர் எனவும் எனினும் அனுமதி கிடைக்கவில்லை எனவும் தெரிவித்த அவர் இவ்வழக்கு குறித்து மேல்முறையீடு செய்ய வசதியாக ஜாதவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் சட்ட ரீதியான நடவடிக்கை வழியாகவும் ஜாதவை காப்பாற்ற இந்திய மத்திய அரசு முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.