171
இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மீரட்-லக்னோ எக்ஸ்பிரஸ் புகையிரதத்தின் 8 பெட்டிகள் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை முன்டாபான்டே-ராம்பூர் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
புகையிரதத்தின் 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, தடம் புரண்டு பக்கவாட்டில் கவிழ்ந்ததாகவும் தகவல் அறிந்த புகையிரத அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளதாகவும் கவிழ்ந்த பெட்டிகளுக்குள் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love